Thursday, 28 March 2013

[KM] Keep_Mailing Archiving of Tamil Scholars Living in Manapparai and Trichy - Phase I - on 29th March 2013

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை

அறிவியல் தமிழ் மன்றம்You Tube Channel

மணப்பாறையில் வாழும் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம்,
 
தமிழ் மொழி 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி என்பது அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் தற்பொழுது நிரூபணமாகியுள்ளது. சுமார் அதிகபட்சம்100 வருடங்கள் வாழ்ந்து மறையும் அறிஞர்கள், 5000 வருடங்களாக வாழும் ஒரு மொழியை பற்றி ஆராய்வது, சிந்திப்பது, உலக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். தமிழை தாய்மொழியாக பெற்ற அறிஞர்களுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்ற ஒரு சிறப்பு இது. நமது முன்னோர்கள் ஆவணப்படுத்தும் பழக்கத்தை பெற்றிருந்தார்கள். ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில் தங்களின் சிந்தனைகளை செதுக்கி பிற்கால தலைமுறைக்கு கொடுத்தார்கள். அவற்றுள் பலவற்றை காக்க முடியாமல் நாம் வாழ்வது– நமது சமூகம் இழைக்கும் குற்றமாகும். முன்னோர்களின் ஆவணங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை, அதனை அவர்கள் செய்யட்டும்.

இன்று நம்முடன் வாழும் அறிஞர்களின் தமிழுக்கான சிந்தனைகளை நாம் ஆவணப்படுத்த வேண்டும், கல்லில் அல்ல – இணையத்தில் – ஆம் இணையமே இன்றைய கல்வெட்டு. இந்த சிந்தனையின் விளைவாக, அறிவியல் தமிழ் மன்றம் என்று இணையத்தில் ஒரு பகுதியை மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை துவங்கியுள்ளது, அறிஞர்களின் அறிய சிந்தனைகளை இங்கு பதிவு செய்து, பிற்காலங்களில் இந்த உலகில் வாழும் நமது வழித்தோன்றல்களுக்கு வழங்குவதே இந்த அரிய பணியின் நோக்கமாகும்.

உங்களுக்கு தோன்றக்கூடிய சில கேள்விகள்..........

கேள்வி: யாருடைய ஆவணம் பெற்றுக்கொள்ளப்படும் ?

பதில்: கட்சி,மத,குழு,பேதமின்றி அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் அறிஞர்களையும் இங்கு பதிவு செய்கிறோம்.

கேள்வி: எவ்வளவு செலவாகும்?

பதில்: பதிவு செய்வது,விழியமாக மாற்றுவது, இணையத்தில் ஏற்றுவது , உலக அறிஞர்களுக்கு அறிவிப்பது – ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் செய்ய மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிதி உதவி செய்கிறது.

கேள்வி: இந்த விழியங்களை காண்பது எவ்வாறு ?

பதில்: http://www.tamillanguagearchives.blogspot.in/

இந்த பதிவுகளை உருவாக்கி இணையத்தில் வைக்கவேண்டும் என்பது எங்களது நோக்கம். மேலே காணப்படும் தளத்தில் இவை என்றுமே காணப்படும்.

கேள்வி: எவ்வளவு காலம் இவை இணையத்தில் இருக்கும் ?

பதில்: உலகம் அழியும் கடைசி நாள்வரை இந்த பதிவுகள் இணையத்தில் இருக்கும்.

கேள்வி: தொலைக்காட்சியில் பேட்டி கொடுப்பது எவ்வாறு இதில் இருந்து மாறுபடுகிறது?

பதில்: தொலைக்காட்சியில் ஒரு முறை மட்டுமே ஒளிபரப்பாகும், மீண்டும் யாரேனும் அறிஞரை தேடிவரும் பொழுது காண முடியாது. தமிழுக்கு இன்றைய ஊடகங்களில் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று உங்களுக்கே தெரியும். கேலி பேசுவது, அரட்டை அடிப்பது, அரசியல் பேசுவது , சினிமா பற்றி சிந்திப்பது ஆகியவையே தமிழ் பதிவுகள் என்று உள்ள நிலையை முதலில் ஒழிக்க வேண்டும். அனைத்து அறிஞர்களுக்கும் ஒரே மாதிரியான நடுநிலையான வாய்ப்பு கிட்ட வேண்டும்.

கேள்வி: எத்தனை முறை,யார் காண முடியும் ?

பதில்: உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் இந்த விழியங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் காண முடியும். எல்லைகள் இல்லாத அற்புத ஊடகம் இது.

முக்கிய குறிப்பு: அரசு, தனி மனிதர்களை,குழுக்களை பற்றி தவறாக பேசக்கூடாது – தற்பெருமை கூடாது – பொய்யான செய்திகளை கூறக்கூடாது– மற்றவரின் கருத்தை தனது என்று கூறக்கூடாது – அனைத்து பதிவுகளும் தமிழ் மொழி பற்றி மட்டுமே அமைய வேண்டும் – அறிவியல் தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்– சுற்றிவளைத்து பேசக்கூடாது – ஒரு தலைப்பை எடுத்து சுருக்கமாக பத்து நிமிடங்கள் பேச வேண்டும் – ஒருவர் பல தலைப்புகளில் பதிவு செய்ய முடியும். பொன்னாடைகளை தேடி திரியும் அறிஞர்கள் இன்று தமிழுக்கு தேவையில்லை – புகழ் விரும்பிகள் ஆவணங்களை தரவேண்டாம். 

கேள்வி: அறிஞர்களுக்கு பொருள் உதவி கிட்டுமா?

பதில்: உங்கள் கருத்தை,தமிழ் மொழிக்கான ஆவலை உண்மையாக தெரிவியுங்கள் – நல்ல உள்ள கொண்ட இணையான சிந்தனையுடைய அறிஞர்கள் உலகில் எங்கு இருந்தாலும் இந்த விழியங்களை கண்டு உள்களிடம் தொடர்புகொள்ள வாய்ப்பு உள்ளது. வாழ்த்துக்கள்.

கேள்வி: இந்த ஆவணங்களை உருவாக்குவதால் எங்கள் அமைப்பிற்கு பணம் ஏதும் கிடைக்குமா ?

பதில்: எங்களுக்கு தெரிந்தவரை அவ்வாறு அமைய வாய்ப்பு இல்லை, இந்த ஆவணங்கள் இலவசமாக இணையத்தில் வைக்கப்படும். நாங்கள் மட்டுமல்ல யாருமே இந்த ஆவணங்களை வைத்து பொருளீட்ட முடியாது. பணம் சம்பாதிக்க தமிழை பயன்படுத்துபவனே தமிழ் மொழியின் முதல் எதிரி. சாமானிய மக்களின் தமிழ் உணர்வை வைத்து பணம் சம்பாதிக்க முயல்வது குற்றம், ஈனச்செயல். தமிழை பாதுகாப்பது தமிழே.

 
 

மேலும் சந்தேகம் இருப்பின் அழைக்கவும் – 9381502554 ; 9381045344

டாக்டர். மு.செம்மல்  MBBS, DLO, B.Sc, M.Sc, M.Phil, M.D, Ph.D

நிர்வாக இயக்குனர், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை

--
--
To post to this group, send email to keep_mailing@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "keep_mailing" group.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
 
 

No comments:

Post a Comment