Neuro Lingusitic Research on Tamil Literature
விருப்பமுள்ளவர்கள் எங்களுடன் இணைந்துகொள்ளவும்.
Slots r open
தமிழில் பேசியும் எழுதியும் மட்டுமே தமிழ் வளர்க்க முடியும் என்று உறுதியாக நம்பும் நண்பர்கள், வெறுமனே எங்களை தள்ளிநின்று வேடிக்கை பார்க்கவும்.
எங்களை இரண்டாம் தர தமிழர்கள் என்று சிலர் கூறினாலும் பரவாயில்லை
பாராட்டு வாங்கிக்கொள்ள நானும் எனது மாணவர்களும் என்றுமே விரும்ப மாட்டோம்
பொன்னாடைகள் - பாராட்டு கூட்டங்கள் - புகழ் பாடும் கவிதைகள் - தமிழ் இனத்தில் இருந்து ஒழிய வேண்டும் என்ற காரணத்திற்காகவே சைபர் தமிழ் சங்கம் தோன்றியுள்ளது.
எனது நண்பன் ஒருவன் , குழந்தைகள் நல மருத்துவர் அவனது குழந்தைகள் நல மருத்துவமையில் பலூன் கட்டி , சிரிப்பு படம் வரைந்து , விளையாட்டு சாமான்களை வைத்திருப்பார்கள்
ஒரு முறை ஒரு பெரியவர் அங்கு வந்து எனது நண்பனிடம் கூறினார் " நீங்கள் என்ன டாக்டர் ? இப்படி கோமாளிகளின் கூடமாக உங்கள் மருத்துவமையை வைத்துள்ளீர்களே - உங்களிடம் எப்படி எனது பேரனை அழைத்து வருவேன் ? நீங்கள் எனது பேரனை கொன்றுவிடுவீர்கள் என்று பயமாக உள்ளது" என்று கூறினார் , ரொம்ப கோபித்துக்கொண்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் எனது நண்பன் சற்று தயங்கி நின்றான்
பின்னர் சொன்னான்
சார் "குழந்தைகளின் உடலில் என்ன உள்ளது, என்ன தேவை என்று எனக்கு தெரியும், அவர்கள் மனதில் என்ன உள்ளது என்றும் நான் அறிவேன் , உங்களுக்கு அனைத்தையும் விளக்க விருப்பம் - ஆனால் நேரம் இல்லை - தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள் "
இன்று நிறைய தமிழ் இளைஞர்களும் இப்படித்தான் உள்ளார்கள்
நமது இயல்பான மருந்து அவர்களுக்கு தேவைப்படாது , எனது பாதையை கொஞ்சும் பொறுமையுடன் காணுங்கள்
இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி ஆசிரியரும் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வாளரும் இணைந்து துவங்கியுள்ள ஒரு ஆய்வு சிந்தனை இது.
இந்த மாணவிக்கு தமிழில் எழுத சிரமம் உள்ளது என தோன்றுகிறது
தமிழ் எழுத முடியாத நீ அழிந்து போக என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை
இப்படிப்பட்ட இளைஞர்கள் நாளைய தமிழ் உலகிற்கு தேவை
இவர்களுக்காக பலருடைய கோபத்தை பெற நேர்ந்தாலும் பரவாயில்லை
அறிவியல் தமிழ் வளர்ச்சியை தவிர எனக்கு எதுவும் பெரிதாக தெரியாது
We will duly acknowledge the scholars who could tune in their expertise in this discussion.
Science has grown to a Himalayan height and to conquer it for Tamil requires very many approaches, and this is one of that - a hybrid technology of using Facebook and Google technology in unison.
டாக்டர்.மு.செம்மல்
சைபர் தமிழ் சங்கம் ( முதல் உறுப்பினர்)
24 X 7 என்னை திட்ட அழைக்க வேண்டிய எண் : 9381045344
Dated : 05052013
You received this message because you are subscribed to the Google Groups "Keep_Mailing" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to keep_mailing+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to keep_mailing@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/keep_mailing?hl=en-US.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
No comments:
Post a Comment